அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!
மகளின் ‘ஜேப்பனீஸ் குக்கிங்’கிற்காக ‘தாய் ஸ்டிக்கி ரைஸ்’ வாங்க ஆரம்பித்து, பிறகு அடிக்கடி வாங்கிவிடும்படி ஆகிவிட்டது. ஸ்டிக்கியாக இருக்கும் இது நல்ல வாசனையுடன் சுவையும் அலாதியாக இருக்கும். வெறும் சாதத்தையே இரண்டு பேரும் போட்டிபோட்டு சாப்பிட்டுவிடுவோம்.
இந்த அரிசியை வைத்து எளிய முறையில் ஒரு இனிப்புப் பொங்கல் செய்வோம். விருப்பமானால் நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்துக்கொள்ளுங்கள். ஏலக்காய் சேர்ப்பதானாலும் இறக்கும்போது பொடியாக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.
என்னைக்கேட்டால் பனை வெல்லம் & தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் இது எதுவுமே தேவையில்லை என்பேன். நம் வீட்டில் உள்ள சாதாரண பச்சரிசியிலும் செய்யலாம்.
எங்க வீட்டில் பெரும் பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலும், பால் பொங்கலும் செய்வாங்க. முதலில் சர்க்கரைப் பொங்கலைப் பார்ப்போம்.
தேவையானவை:
பச்சரிசி _ ஒரு கப்
பனைவெல்லம் _ 3/4 கப்
தேங்காய் பால் _ 3/4 கப்
உப்பு _ துளிக்கும் குறைவாக
செய்முறை:
அரிசியைக் கழுவிவிட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஊறிய அரிசியை தண்ணீருடனே குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ வைத்து குழையாமல் fluffy யாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பனைவெல்லத்தைப் பொடித்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து வந்ததும் மண் & தூசு இல்லாமல் வடிகட்டி அதை ஒரு வாணலில் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள சாதத்தை இதில் கொட்டி விடாமல் கிண்டவும்.
எல்லாம் சேர்ந்து இறுகி வந்ததும் இறக்கவும். இதை அலங்கரிப்பது உங்கள் விருப்பம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பால் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி _ ஒரு கப்
பால் _ 1/4 கப்
வெல்லம்_சிறு துண்டு
செய்முறை:
ஒரு கப் அரிசி வேகுமளவு பாலும் தண்ணீருமாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் ஏற்றவும். அரிசியைக் கழுவி வைத்துக்கொள்ளவும்.
பால் சேர்ப்பதால் தண்ணீர் பொங்கி வெளிவரும். அந்த நேரத்தில் அரிசியைப் போட்டுக் கிண்டிவிட்டு அது வேகும்வரை இடையிடையே கிண்டிவிட்டு வெந்ததும் இறக்கவும்.
சாமிக்குப் படைக்கும்போது சாதத்தின்மேல் சிறு துண்டு வெல்லம் வைத்து படைப்பாங்க. வெறும் பால் பொங்கலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.
7:08 பிப இல் ஜனவரி 13, 2014
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்… சிறப்பு பகிர்வு :
http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html
7:12 பிப இல் ஜனவரி 13, 2014
தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
6:36 முப இல் ஜனவரி 14, 2014
தாய்ஸ்டிக்கிரைஸ் நம்மஊர்புதுஅரிசி வடித்ததுபோல இருக்குமா? இனிய பொங்கல் வாழ்த்துகள் உங்களனைவருக்கும். பனைவெல்லப்பொங்கல்,தேங்காய்ப்பாலுடன் ருசிக்கிறது. பால் பொங்கலும் அப்படியே.. அன்புடன். பனைவெல்லப் பொங்கல் சிறிதாவது அனுப்பவும். அன்புடன்
6:05 பிப இல் ஜனவரி 15, 2014
காமாக்ஷிமா,
இந்த அரிசி சாதாரண பச்சரிசி மாதிரிதான் இருக்கிறது, சாதம் ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொண்டு ஸ்டிக்கியா இருக்க ஏதோ பக்குவம் செய்து அரைப்பார்களா இருக்கும்னு நினைக்கிறேன் அம்மா.
பொங்கலை அனுப்பச்சொல்லி எழுதி இருக்கீங்க, மனதளவில் அனுப்புகிறேன், நீங்களும் அவ்வாறே சுவை பார்த்து சொல்லுங்கம்மா.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா. வாழ்த்துக்களுக்கும் நன்றிம்மா. அன்புடன் சித்ரா.
9:19 முப இல் ஜனவரி 14, 2014
பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
அருமையான பகிர்வு!.. பின்னர் செய்து பார்த்துக் கருதிடுகிறேன்!
நன்றியுடன் வாழ்த்துக்களும்!..
6:08 பிப இல் ஜனவரி 15, 2014
வாங்க இளமதி,
நீங்கள் நினைப்பது நிறைவேறிட என்னுடைய வேண்டுதல்களும் உண்டு. கவிதையால் ஆன வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
செய்து பாருங்க, பார்த்திட்டு வந்து சொல்லுங்க. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.