ஜவ்வரிசி & சேமியா பாயசம்

 

20150501_170725

தேவையானவை :

ஜவ்வரிசி _ கால் கப்
சேமியா _ கால் கப்
சர்க்கரை _ அரை கப் (உங்களின் இனிப்புக்கேற்ப)
பால் _ அரை கப்
ஏலக்காய் _ ஒன்று

அலங்கரிக்க :

நெய் _ முந்திரி & திராட்சையை வறுக்குமளவு
முந்திரி _ 5
திராட்சை _ 5
குங்குமப்பூ _ நான்கைந்து இதழ்கள் (இல்லையென்றாலும் பரவாயில்லை)

செய்முறை :

வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் ஜவ்வரிசியைப் போட்டு தீய்ந்துவிடாமல் வறுக்கவும். வறுக்கும்போதே நமக்குத்தெரியும் ஜவ்வரிசி உருண்டுருண்டு அளவில் கொஞ்சம் பெரிதாகும். வறுபட்டதும் இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.

அது முடிந்ததும் சேமியாவைப் போட்டு சூடுவர வறுத்துக்கொள்ளவும்.

ஒரு கனமான பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி காய்ந்ததும் ஜவ்வரிசியைக் கழுவி சேர்க்கவும்.

அது நன்றாக‌ வெந்து வரும்போது சேமியாவை சேர்க்கவும். (இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் சேமியா முதலில் வெந்து குழைந்துவிடும்)

இரண்டும் வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து கரைந்ததும், பாலைச் சேர்த்து கிண்டிவிட்டு, தேவையானால் தண்ணீர் சேர்த்து, குங்குமப்பூ, பொடித்த‌ ஏலக்காய் சேர்த்து இறக்கி, நெய்யில் முந்திரி & திராட்சையை வறுத்து சேர்க்கவும்.

20150501_162557

பாயசத்தைத் தனியாக மட்டுமல்லாமல், உளுந்து வடை அல்லது அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட ஆஹா என்றிருக்கும் !

சூடாக இருக்கும்போது நீர்த்து இருக்கும், ஆற ஆற இறுகி கெட்டியாகும். எனவே கொஞ்சம் நீர்க்க‌ செய்வ‌து நல்லது.

இதனை வெறும் ஜவ்வரிசியை வைத்தோ அல்லது சேமியாவை மட்டுமே வைத்தோகூட செய்யலாம்.

இனிப்பு வகைகள், பாயசம் இல் பதிவிடப்பட்டது . 3 Comments »

3 பதில்கள் to “ஜவ்வரிசி & சேமியா பாயசம்”

  1. மகிஅருண் Says:

    வெகு நாளாச்சு பாயசம் வைச்சு…முதல் படம் ஜொள்ளு வர வைக்குது!! 😉
    //ஒரு கனமான பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் ஊற்றி // இவ்ளோ தண்ணி ஊத்தணுமா சித்ராக்கா?? அவ்வ்வ்வ்!!!

    நான் ஜவ்வரிசியை தனியா வேகவைச்சு, பச்சைத்தண்ணில கொஞ்சம் அலசிட்டு சேமியாவோட சேர்ப்பேன்..அந்த வேலைல்லாம் செய்ய பொறுமை இல்லாததால் பெரும்பாலும் சேமியா பாயசம்தான். கூடவே கொஞ்சம் கண்டென்ஸ்ட் மில்க் இல்லன்னா எவாப்பரேடட் மில்க் சேர்த்தா சூப்பரா இருக்கும். 🙂 குங்குமப்பூ…ஹ்ம்ம்..பார்க்க அழகா இருக்கும், ஆனா எனக்கென்னவோ அந்த வாசம் அவ்வளவா புடிக்கிறதில்லை!!

    வெல்லம் சேர்த்து சேமியா பாயசம் செய்து பார்க்கணும்னும் ஆசை..நீங்க செய்திருக்கீங்களா??

    • chitrasundar5 Says:

      “வெகு நாளாச்சு பாயசம் வைச்சு” _____ இது மட்டும் என்ன !! ….. அப்போ வச்சதுதான் மகி :))))

      ஜவ்வரிசி வேகணுமே, கொஞ்சம் நேரமெடுக்கும், அதுக்கு இவ்ளோ தண்ணி வேணும்தான். ஜவ்வரிசிய வேகவச்சு அலசி எடுக்கணுமா !!

      இங்கயும் குங்குமப்பூ பிடிக்காதவங்கதான் இருக்காங்க. எனக்கு மட்டுமே பிடிக்கும். வெறுமனேகூட தின்னுடுவேன் 🙂

      வெல்லம் சேர்த்து செய்வாங்கனுதான் நெனக்கிறேன். செஞ்சு பார்த்துடலாம் !

  2. chollukireen Says:

    நான் பாயஸத்திற்கு பால் அதிகம் சேர்ப்பேன். இந்த ஜெவ்வரிசி,சேமியாவை வறுத்து, தண்ணீர் விட்டுக் களைந்து வேக வைப்பது அதிக வழுழுப்பில்லாமலிருக்க உதவும். நெய்யில் சேமியாவை வறுத்து சேர்த்தால் சில ஸமயம் பால் திரிந்துவிடும். பாலை சுண்டக் காய்ச்சி சேர்த்தால் பாயஸம் நீர்க்காமல் இருக்கும். சுலபமா இருக்கு உன் பாயஸம்.வெல்லம் சேர்த்துச் செய்தால் தேங்காய்ப்பால் சேர்த்தால் ருசிக்கும் என்பது என் எண்ணம். அன்புடன்.
    ஓ மஹி எப்படி இருக்கிறாய்,லயாக்குட்டி என்ன பண்றே?


மறுமொழி இடுக‌