தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய்_ 5
சின்ன வெங்காயம் _3
பூண்டு_5
வடகம்_1/2 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
மிளகாய் தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை_ 1/2 ஈர்க்கு
உப்பு_தேவைக்கேற்ப
நல்லெண்ணெய்_ 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கத்தரிக்காயை நீள வாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கி தண்ணீரில் போடவும். இல்லை என்றால் காரல் அடிக்கும்.பூண்டை லேசாக தட்டி வை. சின்ன வெங்காயத்தை பொடியாக அறிந்து வை.வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் வடகம்,சீரகம்,பெருஞ்சீரகம்,பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து,பிறகு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கி இறுதியாக கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும்.சிறிது வதங்கிய பின் அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும். இடை இடையே கிளறிவிட்டு நன்றாக வெந்ததும் இறக்கு. இது சாதத்திற்கு பக்க உணவாகும்.
மறுமொழி இடுக