கேழ்வரகு & வெந்தயக்கீரை பகோடா / Kezhvaragu & Vendhaya keerai pakoda

raagi pakoda

நான் கேழ்வரகு மாவுடன் வெந்தயக்கீரை சேர்த்து செய்துள்ளேன்.வெந்தயக்கீரைக்குப் பதிலாக முருங்கைக்கீரை சேர்த்தும் செய்யலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வெந்தயக்கீரை_ஒரு கப்
பெரிய‌ சின்ன வெங்காயம்_1 (சாதாரண சின்ன வெங்காயம் என்றால் 5 லிருந்து 10 க்குள்)
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய்_1
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

மார்க்கெட்டில் இளம்,துளிர் வெந்தயக்கீரையைப் பார்த்ததும் வாங்காமல் வர மனமில்லை.வாங்கிவந்து சாம்பார்,பகோடா இரண்டும் செய்தாயிற்று.இங்குள்ள‌ பகோடா நன்றாக இருப்பதாகத் தோன்றினால் நீங்களும் செய்து பார்க்கலாமே.

methi leaves

வெந்தயக்கீரையை ஆய்ந்து,தண்ணீரில் அலசி எடுத்து நீரை வடிக்கவும். கீரையை நறுக்காமல் முழுதாகவே போட்டுக்கொள்வோம். நறுக்கினால் கசப்பு அதிகமாகிவிடும்.

சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை&கொத்து மல்லி இவற்றைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு கிண்ணத்தில் மாவு முதற்கொண்டு எல்லாவற்றையும் போட்டு,கைகளால் கிளறிவிட்டு,சிறிதுசிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.கிள்ளி எடுத்து போடும் பதமாக இருக்கட்டும்.

raagi pakoda

ஒரு வாணலில் திட்டமாக எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்,மாவைக் கிள்ளினாற்போல் எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு தரம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

மாலை நேரத்துக்கு கொறிக்க சுவையான,மொறுமொறு கேழ்வரகு பகோடா ரெடி.

அடுத்த நாளும் அந்த மொறுமொறு குறையவேயில்லை.துளி எண்ணெய்கூட குடிக்கவில்லை.

12 பதில்கள் to “கேழ்வரகு & வெந்தயக்கீரை பகோடா / Kezhvaragu & Vendhaya keerai pakoda”

 1. திண்டுக்கல் தனபாலன் Says:

  செய்து பார்க்க சொல்கிறேன்… நன்றி…

 2. MahiArun Says:

  Never used methi leaves in pakoda..interesting recipe!

 3. rajalakshmiparamasivam.blogspot.com Says:

  வெந்தயக் கீரை பகோடா நானும் செய்ததில்லை. கசக்காதா?
  கசக்கவில்லை என்றால் செய்யலாம். டையாபெடிக்ஸ்ற்கு மிகவும் நல்லது.
  உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் Quinoa வில் என்னவெல்லாம் செய்யலாம். அந்த ரெசிபி ஏதாவது போடுங்களேன்.
  நன்றி சித்ரா..

  • chitrasundar5 Says:

   இளம் கீரை என்பதால் கசப்பெல்லாம் தெரியலிங்க.பிசையும்போது நிறைய கீரை இருந்த மாதிரி தெரிந்தது,ஆனால் பகோடாவில் தேடிக்கண்டுபிடிக்கிற மாதிரி ஆயிருச்சி.

   “டையாபெடிக்ஸ்ற்கு மிகவும் நல்லது”___எங்கம்மாகூட சொல்லுவாங்க‌.

   Quinoa வும் அரிசி,ஓட்ஸ் மாதிரிதான்.முன்பு வாங்கினேன்.வீட்ல யாருமே சாப்பிடலை.பிறகு அந்தப் பக்கமே போவதில்லை.எனக்கும் உங்களிடம் ஒரு கேள்விங்க.அது நம்ம ஊர் தானியத்துல எதுனு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.இங்கே Quinoa உப்புமா ரெஸிபி இருக்கு.https://chitrasundar5.wordpress.com/?s=Quinoa. பயன்படுமானு பாருங்க.வருகைக்கு நன்றிங்க.

 4. chollukireen Says:

  நல்ல ஆரோக்யமான பகோடா. இதே மாதிரி உளுந்துமாவு அரைக்கும் போதும் எடுத்துச் செய்யலாம். இளங்கீரை. ருசி அதிகமானது. எதனுடன் சேர்ந்தாலும் ருசி,மணம் கூடும்.
  நறுக்கினால் கீரை கசந்துவிடும். அல்லது உடன் உபயோகிக்க வேண்டும் ஸரியாகச் சொன்னாய். நல்ல குறிப்பு.

  • chitrasundar5 Says:

   காமாக்ஷிமா,

   வெந்தயக்கீரையை நறுக்கினால் உடனே செய்துவிட வேண்டும் என்பது இப்போதுதான் தெரியும்.நீங்க சொன்ன மாதிரியேதான் வெந்தயக்கீரை இருந்தால் எது செய்தாலும் கொத்துமல்லி தழை மாதிரி எல்லாவற்றிலும் சேர்த்துவிடுவேன்.

   ‘உளுந்துமாவு அரைக்கும் போதும் எடுத்துச் செய்யலாம்’__இதுவும் நல்லாருக்கே.இட்லிமாவு அரைக்கும்போது எடுத்து செய்திடலாம்.வருகைக்கு நன்றிமா.அன்புடன் சித்ரா.

 5. ranjani135 Says:

  quinoa என்றால் தினை.
  நேற்று ஜெயா தொலைகாட்சியில் ஒரு பெண்மணி இதில் கிச்சடி செய்தார்.
  யாரையோ கேட்டால் யாரோ பதில் சொல்றாங்க!

  • chitrasundar5 Says:

   quinoa என்றால் தினையா!தெளிவுபடுத்தியமைக்கு நன்றிங்க.

   எங்கம்மா தீபாவளிக்கு தினையில்தான் அதிரசம் செய்வாங்க.அது பார்ப்பதற்கு அளவில் சிறிய கம்பு மாதிரி இருக்கும்.நானும் இந்த quinoaவை வைத்து அதிரசம் செய்து பார்த்தேன்.எனக்கு திருப்தியில்லை.

   “யாரையோ கேட்டால் யாரோ பதில் சொல்றாங்க!”___இப்படி துறுதுறுன்னு பதில் சொல்றவங்கள முன்னாடி பெஞ்சுல உக்கார வச்சாதான் சமாளிக்க முடியும்.ஹா ஹா. பின்னூட்டம் போடுவதுமல்லாமல்,மீண்டும் அந்தப் பக்கம் வந்து மறுமொழிகளையும் படித்து பதில் போடுவது மகிழ்ச்சியாக உள்ளது.

   • ranjani135 Says:

    நீங்க என்ன புதுசா எழுதியிருகீங்கன்னு பார்க்க வந்தேன். அடுத்த பக்கம் போகமுடியலையா, (!!) அதனாலே இந்தக் கேள்விக்கு பதில் சொல்லலாமே என்று சொன்னேன். அதுவுமில்லாமல் Google Translator எப்பவுமே திறந்து வைத்திருப்பேன். உடனே பார்த்து சொல்லிட்டேன்!

    முதல் பெஞ்சுல இடம் கொடுத்ததற்கு நன்றிங்கோ!

   • chitrasundar5 Says:

    கடைக்குப் போய்ட்டு வந்து பக்கத்தை மாற்றிவிடுகிறேன்.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: