கிழங்கு சுடுதல் & அவித்தல்

கிழங்கு  சுடுதல்:

கிழங்குகளை அவித்து சாப்பிடுவதைவிட விறகடுப்பில் உள்ள நெருப்பில் சுட்டு சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும். அடுப்புமில்லை, நெருப்புமில்லை. அதற்குப் பதிலாக அவனில் சுட்டு எடுக்கலாம்.

கீழேயுள்ள முறையில் மரவள்ளிக்கிழங்கு,உருளைக்கிழங்கு இவற்றையும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

வள்ளிக்கிழங்கு/மரவள்ளிக்கிழங்கு/உருளைக்கிழங்கு _1
எண்ணெய்_ஒரு டீஸ்பூன்

வள்ளிக்கிழங்கை நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டு ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்/வெஜிடபிள் எண்ணெயை கிழங்கு முழுவதும் தடவிவிட்டு ஒரு ஃபோர்க் ஸ்பூனால் அங்கங்கே குத்திவிட்டு அவன் ட்ரேயில் அலுமினம் ஃபாயிலைப் போட்டு அதில் கிழங்கை வைத்து 400 டிகிரியில் பேக் செய்யவும்.

பெரிய கிழங்காக இருந்தால் வேக 45 நிமி ஆகும்.கிழங்கின் அளவைப் பொருத்து நேரம் மாறுபடும்.

முதல் 1/2 மணி நேரம் கழித்து அவனைத் திறந்து கிழங்கைத் திருப்பி விடவும்.

அடுத்த 1/4 மணி நேரத்தில் கிழங்கு சாப்பிட ரெடியாகிவிடும்.கிழங்கைத் தொட்டுப் பார்த்து லேஸாக அமுங்கினால் எடுத்து துண்டுகள் போட்டு சாப்பிடவேண்டியதுதான்.

புதிதாக சமைப்பவர்களுக்கு இது உதவும் என்று நினைக்கிறேன்.

கிழங்கு அவித்தல்:

தேவையானப் பொருள்கள்:

வள்ளிக்கிழங்கு/மரவள்ளிக்கிழங்கு_1
உப்பு_சிறிது

ஒரு இட்லிப் பாத்திரத்தில் இட்லிக்கு வைப்பதுபோலவே தண்ணீர் விட்டு இட்லித்தட்டை வைத்து அதில் ஈரமான இட்லித்துணி/பேப்பர் டவல் போட்டு மூடி அடுப்பில் ஏற்றி தண்ணீர் கொதி வருவதற்குள் பின்வரும் வேலையை
செய்துகொள்வோம்.

மரவள்ளிக் கிழங்கை விருப்பமான அளவில் துண்டுகளாக நறுக்கி அதன் தோலை உரித்துவிட்டு (தோலுடன் அவித்தால் இன்னும் சுவையாக இருக்கும்) வெட்டுபட்ட பகுதியில் உப்பு ஸ்ப்ரே செய்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லித் தட்டில் அடுக்கி வைத்து மூடி போட்டு வேக வைக்க‌ வேண்டும்.

                          

கொஞ்ச நேரம் கழித்து மூடியைத் திறந்து கிழங்கு வெந்துவிட்டதா எனப் பார்த்து (கிழங்கை லேஸாக அழுத்தினால் அமுங்க வேண்டும்.) எடுத்துவிடவும்.

பிறகு சிறுசிறு துண்டுகள் போட்டு சாப்பிடலாம்.சாப்பிட்டு மீதமான கிழங்கில் பொரியல் செய்யலாம்.

       

இதே முறையிலேயே வள்ளிக் கிழங்கையும் ( தோலெடுக்காமல்) அவித்தெடுக்க வேண்டும்.

9 பதில்கள் to “கிழங்கு சுடுதல் & அவித்தல்”

  1. Mahi Says:

    என்னவருக்கு மண்ணுக்கு கீழ் விளையும் கிழங்குவகைகள் என்றாலே அலர்ஜி! நான் ஆசைக்கு எப்பவாவது சர்க்கரைவள்ளி வாங்கி, வாங்கியதை மறந்தும் போயிருவேன் பலநாள்! இப்பக்கூட 15நாள் முன்பு வாங்கிய கிழங்கு ஃப்ரிட்ஜின் ஒரு மூலையில் ஒளிஞ்சிருக்குது.உங்க போஸ்ட்டைப் பார்த்ததும்தான் ஞாபகம் வரது! 😉

    ச.வள்ளியை அவன்-ல பாயில்ல சுத்தி வைச்சேன் ஒரு முறை, கொழைஞ்சு போச்! அதிலிருந்து குக்கரில்/பாத்திரத்தில்தான் வேகவைப்பேன். அழகா செய்திருக்கீங்க! அப்புறம் ஸ்வீட் பொட்டட்டோ சிப்ஸ் செய்துருக்கீங்களா…செய்து பாருங்க,சூப்பரா இருக்கும்! 😛

    • chitrasundar5 Says:

      மகி,

      எங்க வீட்டில் அப்படியே தலைகீழ்.ஒவ்வொரு வாரமும் ஃபார்மர்ஸ் மார்க்கெட் போனால் ச.வ.கிழங்கு இல்லாமல் வருவதில்லை.அதேபோல் இண்டியன் ஸ்டோரில் ம.வ.கிழங்கு.

      நான் செய்த கிழங்கு பெரிய ஸைஸ்.நீங்க செய்தது சின்னதா இருந்துச்சா? எவ்வளவு நேரம் வச்சிங்க?இடையில் ஒருதடவ கண்டிப்பா திருப்பி விடனும்.

      குக்கரில் கிழங்கு,சுண்டல் வகைகள் வேக வைத்தால் அதன் சுவையே போய்டும்.இட்லிப் பானையில் கிழங்கும்,சாதாரண பாத்திரத்தில் சுண்டலும் வச்சி ஒரு தடவ ட்ரை பன்னி பாத்துட்டு சொல்லுங்க.

  2. Mahi Says:

    I have steamed the sweet potato in the idli-pot! Turned out delicious and I could taste the difference! 🙂

    Thanks for the tips!

    • chitrasundar5 Says:

      மகி,
      கிழங்கு நன்றாக வந்ததில் மகிழ்ச்சி.மேலும் பின்னூட்டத்திலுள்ள படமே எல்லாவற்றையும் சொல்லிவிட்டது.

      மரவள்ளி சிப்ஸ் தெரியும்.ஸ்வீட் பொட்டடோ சிப்ஸ் நான் செய்ததில்லை.நீங்க குறிப்பு கொடுத்தீங்கனா செய்து பார்க்கிறேன்.நன்றி மகி.

  3. GMAX Says:

    micro oven – ல் 3 அல்லது 4 அல்லது 5 நிமிடம் வைத்து எடுத்து சாப்பிடுங்கள் சாப்பிட சுவையாக இருக்கும்.


மறுமொழி இடுக‌